உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழ் - மாண்புமிகு அமைச்சருடன் சந்திப்பு!
சிங்கப்பூரில் சூன் 16 முதல் 18 வரை நடைபெறவிருக்கும் பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல், தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு அவர்களிடம் அளிக்கப்பட்டது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களும், பொதுச்செயலாளர் முனைவர் உலகநாயகி பழனி அவர்களும், அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழை அளித்தனர். இந்த அழைப்பிதழை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள், மாநாட்டின் வெற்றிக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் செயல்களுக்கும் தமிழக அரசின் நல்லாதரவு என்றும் தொடரும் என உறுதியளித்தார்.