தவத்திரு தனி நாயகம் அடிகளார் தொடங்கிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் கீழ்க்காணும் நோக்கங்களைக் கொண்டிருந்தது; உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்களைத் தமிழாராய்ச்சியில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைக்கழகத் தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் செயல்பட இம்மன்றம் தொடங்கப்பட்டது.
உலகிலுள்ள அறிஞர் பலரை ஒன்று சேர்த்து, அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவுவதும் வகையில் இரண்டாண்டுகட்கு ஒருமுறை “உலகத் தமிழ் மாநாடு’ நடத்த இம்மன்றம் முடிவு செய்து, மாநாடு நடத்தவிரும்பும் நாடுகள் இம்மன்றத்தின் ஒத்துழைப்புடன் மாநாடுகளைச் சிறப்புற நடத்த வழி செய்தது.
பத்தாவது மாநாடு 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 முதல் 7 வரை அமெரிக்காவில் சிக்காகோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.
ஒன்பதாவது மாநாடு இருபது ஆண்டுகள் கழித்து 2015 ஆம் ஆண்டுசனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது.
எட்டாவது மாநாடு ஆறு ஆண்டுகள் கழித்து 1995 ஆம் ஆண்டு சனவரி 1-5 ஆம் நாட்களில் தஞ்சாவூரில் நடந்தது.
ஏழாவது மாநாடு இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 1-8 ஆம் நாட்களில் ஆப்பிரிக்காவில் மொரீசியசில் நடந்தது.
ஆறாவது மாநாடு ஆறு ஆண்டுகள் கழித்து 1987 ஆம் ஆண்டு நவம்பர் 15-19 ஆம் நாட்களில் கோலாலம்பூரில் நடந்தது.
ஐந்தாவது மாநாடு ஏழு ஆண்டுகள் கழித்து 1981 ஆம் ஆண்டு சனவரி 4-10ஆம் நாட்களில் மதுரையில் தமிழக அரசின் .உதவியுடன் நடத்தப்பட்டது.
மூன்றாவது மாநாடு இரண்டு ஆண்டுகள் கழித்து 1970 ஆம் ஆண்டு சனவரி 15-18ஆம் நாட்களில் பாரிசு நகரல் பாரிசு பல்கலைக்கழகத்தில் பேரா. ஜீன் பிலியோசா நடத்தினார்.
இரண்டாவது மாநாடு இரண்டு ஆண்டுகள் கழித்து 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சி.என்.அண்ணாத்துரை தலைமையில் தமிழக அரசின் உதவியுடன் சென்னையில் நடத்தப்பட்டது.
முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.