வணக்கம். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மய்ய நிர்வாகக் குழு, அறிஞர்களுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கை வரையறையின்றி வாய்ப்பளிக்க வேண்டும் என்ற தனது முதன்மை நோக்கத்தைப் பற்றி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை சூலை 7-9, 2023, தேதிகளில் சென்னை, செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் நடத்த தேர்வு செய்துள்ளது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது. அடுத்த சில நாட்களுக்குள் ஏற்பாட்டுக் குழுவிடமிருந்து கூடுதல் தகவல்களை எதிர்பார்க்கவும்.
மாநாட்டிற்கு தொடர்ந்து உங்கள் ஆதரவையும் பங்கேற்பையும் எதிர்பார்க்கிறோம். மாநாடு ஏற்பாடுகள் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு organizing-committee@icsts11.org என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும். நன்றி .
அன்புடன்
முனைவர் மு பொன்னவைக்கோ
தலைவர் – உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்
முனைவர் ப மருதநாயகம்
தலைவர் – ஆய்வுக்குழு, பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
————————
Greetings!
As The International Association of Tamil Research (IATR) has earlier informed about its primary objective to provide opportunity to scholars without hard limits it is now happy to announce that the 11th International Conference-Seminar on Tamil Studies will be held on July 7-9, 2023, at the campus of The Institute of Asian Studies, Chemmancherry in Chennai. Please look forward for more information from the organizing committee within the next few days.
We appreciate your patience and look forward to your participation and support. If you have any questions or concerns, please do not hesitate to contact us at organizing-committee@icsts11.org.
With Warm Regards
Dr. M. Ponnavaikko
President, International Association of Tamil Research
Dr. P. Marudanayagam
Chair-Academic Committee, 11th International Conference – Seminar on Tamil Studies