செய்திக்குறிப்பு
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மய்ய நிர்வாகக் குழு, அறிஞர்களுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கை வரையறையின்றி வாய்ப்பளிக்க வேண்டும் என்ற தனது முதன்மை நோக்கத்தைப் பற்றி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை சூலை 7-9, 2023, தேதிகளில் சென்னை, செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் நடத்த தேர்வு செய்துள்ளது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.